Asianet News TamilAsianet News Tamil

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு.!

கர்நாடகா, அரியானா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

appointments 8 states get new governors
Author
Delhi, First Published Jul 6, 2021, 2:54 PM IST

கர்நாடகா, அரியானா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் படி குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். 5 ஆண்டுகள் கொண்டது இந்தப் பதவிக் காலம். அதன்பிறகு ஆளுநரை மாற்றுவது அல்லது அவரே தொடர்வதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். அந்த வகையில், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம்:

*   கர்நாடகா -தாவர் சந்த் கெலாட்

*  இமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*   மிசோரம் -ஹரிபாபு கம்பாம்பட்டி

*   இமாச்சல பிரதேசம் -ராஜேந்திரன் விஸ்வநாத்

*   மத்திய பிரதேசம்- மங்குபாய் சஹான்பாய் படேல்

*  மிசோரம் ஆளுநராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  திரிபுரா ஆளுநராக இருந்த சத்யதேவ் நாராயண் ஆரியா அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios