குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா, உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கய்ய நாயுடு நீண்ட காலமாக பாஜகவில் இருந்து வருகிறார். தமிழக அரசியல்வாதிகளோடு நெருக்கம் காட்டி வரும் வெங்கய்யா நாயுடுவின் தாயார் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில், 66 வயதான மனைவி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களது மகள் சென்னையில் தீபா வெங்கட் சென்னையில் வசிக்கிறார். கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வந்த அவர் தற்போது போட்கிளப் பகுதியில் குடியேறி இருக்கிறார். தீபா வெங்கட், ஈக்காட்டுதாங்கலில் விஷ்ணு மோட்டார் கார் டீலர் கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.