திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கியதில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ராமதாஸ் வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். முக்கிய பொறுப்புகள் அனைத்தையும் தனது மகன் அன்புமணி கவனித்து வந்தார். பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது அமர்ந்தபடி மட்டுமே பேட்டியளித்து வந்தார்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போது ராமதாஸ் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.