Asianet News TamilAsianet News Tamil

இது சமூகநீதியா.? உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துங்க.! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Anumani Ramadoss appeals to the Tamil Nadu Govt to implement the Supreme Court ruling
Author
First Published Mar 8, 2023, 11:51 AM IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். 

அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது.

Anumani Ramadoss appeals to the Tamil Nadu Govt to implement the Supreme Court ruling 

வணிகவரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித்துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி.

இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!

Anumani Ramadoss appeals to the Tamil Nadu Govt to implement the Supreme Court ruling

வணிகவரித்துறையினருக்கு  கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் தொடரக்கூடாது. இதில் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு  வணிகவரித்துறையினருக்கு  உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க..எனக்கு ஒட்டு போட்டு கிழிச்சிட்டீங்க.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!!

வணிகவரித்துறையில் 120-க்கும் உதவி ஆணையர் பணியிடங்கள்  பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios