இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல கனிமொழி எம்.பி பெருமிதம்.இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று திமுக எம்.பி  கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து பல்வேறு வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ் அமைப்புகள் எல்லாம் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தி எதிர்ப்பை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் "இந்தி தெரியாது போட" வாசகம் அடங்கிய டிசர்ட்.

"தமிழகத்தில் பல்வேறு விதங்களில் நடைபெறும் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் விதமாக ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்துடன் கூடிய டி சர்ட்டுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை தற்போது இளைஞர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.இந்நிலையில் இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று திமுக எம்.பி  கனிமொழி பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள தனது  ட்விட்டர் பக்கத்தில் "ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல! என பதிவிட்டுள்ளார் கனிமொழி.

  தமிழகத்தில் இந்திஎதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.மத்திய அரசு எப்படியாவது தமிழகத்தில் இந்தியை திணித்து விட போராடிக்கொண்டிருக்கிறது.. நாங்கள் விட மாட்டோம் என்று பல்வேறு யுக்திகளை எதிர்கட்சிகள் தமிழ் ஆர்வலர்கள் கையாண்டு வருகின்றனர். ஆக தமிழகத்திற்கு மத்திய அரசிற்கும் இடையே இந்தி போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.