சமூக நீதிக்கு எதிரானவர் கல்வித் தொலைக்காட்சி சிஇஓவா... ஸ்டாலின் அரசை டார்டாரா கிழிக்கும் ஜவாஹிருல்லா.
தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தோற்று நேரத்தில் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாகவே மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வந்தது, கற்றல் குறைபாட்டை போக்கவும் மாணவர்களின் வீடுகளுக்கே கல்வியை கொண்டு சென்று சேர்க்கவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவிடும் வகையிலும் கல்வி தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தோற்று நேரத்தில் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாகவே மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வந்தது, கற்றல் குறைபாட்டை போக்கவும் மாணவர்களின் வீடுகளுக்கே கல்வியை கொண்டு சென்று சேர்க்கவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவிடும் வகையிலும் கல்வி தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது.
இது தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தொலைக்காட்சியை மறுகட்டமைப்பு செய்ய தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓவாக தலைமைச் செயல் அதிகாரியாக மணிகன்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய முன் அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் முழுக்க முழுக்க வலதுசாரி பின்னணி கொண்டவர், தொடர்ந்து திமுக ஆட்சிக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் மதநல்லிணக்கத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருபவர் என குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவரது நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் மணிகண்ட பூபதி நியமனத்திற்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-
பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வழியே கல்வியை அளிப்பதற்குத் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) மணிகண்ட பூபதி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், வலதுசாரி சிந்தனைக் கொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.சமூகநீதி மற்றும் சமத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தகுதிமிக்க ஆளுமைகள் தமிழகத்தில் உள்ளபோது தொடர்ந்து சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராகக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரைக் கல்வித் தொலைக்காட்சிக்கு முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல.
சமூக நீதியையும் சமூக நல்லிணக்கத்தையும் இலட்சியமாக கொண்டு செயல்படும் திமுக அரசிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் ஒருவர் வளரும் தலைமுறையினர் உள்ளத்தில் திராவிட கொள்கைக்கு எதிரான மனப்பான்மையை ஏற்படுத்த கூடும். எனவே, தமிழக அரசு மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்து கல்வி மற்றும் ஊடகத்துறையில் தகுதியுள்ள வேறுஒரு வல்லுநரை நியமனம் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் உள்ள நிலையில் மணிகண்ட பூபதி கடந்த திமுக ஆட்சியின் போது கருணாநிதி அரசுக்கு எதிராக பல கார்டூன் வீடியோகளை வெளியிட்டு வந்தவர், தொடர்ந்து சமூக நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் எதிராக பேசி வந்தவர் இப்படிப் பட்ட ஒருவரை சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு தொலைக்காட்சிக்கு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நியமித்து குளறுபடி செய்துள்ளார்.
இந்த மணிகண்ட பூபதி யார், அவரது பின்னணி என்ன என்பதையெல்லாம் தெரிந்திருந்தும் அவரை நியமித்துள்ள அன்பில் மகேஷ் அமைச்சர் பதிவிக்கே தகுதி அற்றவர் எனவே அவர் பதவி விலக வேண்டும் என பலரும் #Resign_AnbilMahesh என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.