Asianet News TamilAsianet News Tamil

Thangamani : கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு.. வசமாக சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர் தங்கமணி ?

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Anti corruption raid former aiadmk minister thangamani
Author
Namakkal, First Published Dec 15, 2021, 9:13 AM IST

அதிமுகவை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து தன் மனைவி மற்றும் மகள் பெயரில் கடந்த 5 ஆண்டில் சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது. 

Anti corruption raid former aiadmk minister thangamani

தமிழ்நாடு மின்சாரத் துறை  முன்னாள் அமைச்சர் பி,தங்கமணி, தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலானபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

வழக்கு தொடர்பாக பி.தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் தேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Anti corruption raid former aiadmk minister thangamani

பி.தங்கமணி மற்றும் சேலத்தில் உள்ள அவரது மகன் தரணிதரன், உறவினர்கள், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 69க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. Prevention of Corruption Act 1968 as amendod in 2018 -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2016-20 வரையிலான பணிக்காலத்தில், வழக்கின் முதல் குற்றவாளியான பி.தங்கமணி,  இரண்டாவது குற்றவாளியான அவரின் மகன், மூன்றாவது குற்றவாளியான அவரின் மனைவி மூலம் 7 கோடி மதிப்பிலான சொத்து பெறப்பட்டுள்ளது. 

Anti corruption raid former aiadmk minister thangamani

ஆனால், அதே காலத்தில் இந்த மூவரின் சேமிப்புத் தொகை 2 கோடியாக மட்டுமே உள்ளது. 2016-20 வரையிலான பணிக்காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, ரூ.4 கோடி (4,85,72,019) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக மதிப்படப்படுகிறது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளார் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வீட்டில் ஏற்கெனவே சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios