ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் கீர்த்திவாசன், மூன்றாவது முறையும் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆண்டுதோறும்நீட்தேர்வுநடைபெறும்போதும், நீட்தேர்வுமுடிவுகள்வெளியாகும்போதும்தோல்விபயம் அல்லது குறைந்தமதிப்பெண்கள்காரணமாகமாணவர்கள்தற்கொலைகள்நிகழ்கின்றன. கடந்தசெப்டம்பர் 12ம் தேதிநீட்தேர்வுதொடங்குவதற்குமுன்பிருந்து, தேர்வுநடைபெற்றஅடுத்தடுத்தநாட்களில்மூன்றுமாணவர்கள்உயிரைமாய்த்துக்கொண்டனர். நீட்தேர்வுக்குதமிழகத்தில்கடும்எதிர்ப்பலைநிலவும்சூழலில்மாணவர்களின்தொடர்தற்கொலைபெரும்அதிர்ச்சியைஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை, கிணத்துக்கடவு அருகே முதூரில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 20 வயதாகும் கீர்த்திவாசன், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். அவரது தந்தை குப்புசாமி கிணத்துக்கடவு முதூரை சேர்ந்த விவசாயி ஆவார். 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அவற்றில் கீர்த்திவாசனால் தேர்வுபெற முடியவில்லை. மனம்தளராமல் 2021ம் ஆண்டிலும் நீட் தேர்வை எழுதி முடிவுகளுக்காக பயத்துடன் காத்திருந்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எந்த நேரமும் நீட் முடிவுகள் வரலாம் என்ற நிலையில், மீண்டும் தோற்றுவிடுவோமோ என்ற மன உளைச்சலில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார் கீர்த்திவாசன். யாரிடமும் சரியாகப் பேசாமல், பயத்துடனேயே இருந்த கீர்த்திவாசன், நேற்று மதியம் 2 மணியளவில், விவசாய நிலத்தில் தெளிப்பதற்காக தந்தை குப்புசாமி வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகன் பூச்சி மருந்து குடித்து விழுந்து கிடந்ததைப் பார்த்துப் பதறிப்போன தந்தை குப்புசாமி, உடனடியாக கீர்த்திவாசனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். எப்படியும் மகனை பிழைக்க வைத்துவிடவேண்டும் என்று போராடி, பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டுசேர்த்துள்ளார் குப்புசாமி. ஆனால் துரதிருஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மாணவன் கீர்த்திவாசனின் உயிர் பிரிந்தது. தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் ”நீட் தேர்வு குறித்த மன உளைச்சலில் தற்கொலை” என்று பதிவுசெய்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

மற்றமாநிலங்களைவிடவும்தமிழகத்தில்நீட்தேர்வுக்குத்தீவிரமானஎதிர்ப்புநிலவி வருகிறது. மாணவர்கள்தற்கொலைகளும்அதிகரித்து வருகின்றன. நீட்வந்தபின்னர் தமிழகத்தில் 2017ல்நடந்தஅனிதாதற்கொலைஉட்பட,கடந்த 5 ஆண்டுகளில்குறைந்தது 16 மாணவர்கள்தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். நீட் வாழ்வின் முடிவல்ல, எல்லையில்லா பல வாய்ப்புகளின் களமாக உலகம் பரந்து விரிந்தது என்பதை மாணவர்களும் உணரவேண்டும், பெற்றோரும் பிள்ளைகளூக்கு உணர்த்த வேண்டும்.

நீட் தேர்வு மன உளைச்சலால் நிகழும் மரணங்களாஇ முடிவுக்கு கொண்டுவரவும், மாணவர்களுக்கு உதவவும், 104 என்ற இலவச உதவி எண்ணை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்தஎண்ணைதொடர்புகொண்டால்மனநலமருத்துவர்களும், மருத்துவஆலோசகர்களும்எப்போதும்தயார்நிலையில்இருப்பார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது. மனஅழுத்தம், தற்கொலைஎண்ணம்உடையோர்உளவியல்ஆலோசனைக்கு 24 மணிநேரஅரசுஉதவிஎண் 104-தொடர்புகொள்ளலாம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்... நீட் வாழ்வின் முடிவல்ல என்ற எண்ணத்தை மாணவர்கள் நெஞ்சங்களில் பதியவைப்போம்.