another mla meeting with dhinakaran

டி.டி.வி.தினகரனுக்கு நேற்று 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தநிலையில் இன்று காலை கலசப்பாக்கம் பன்னீர் செல்வம், செய்யாறு மோகன் ஆகியோர் தினகரனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் பரமக்குடி முத்தையா மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரும் சற்றுமுன் டி.டி.வியை சந்தித்த ஆதரவு தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டி.டி.வி.தினகரன் கட்சிப்பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை முடிவி செய்து நேற்று அறிவித்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன், இன்பதுரை, தங்கதுரை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கலசப்பாக்கம் பன்னீர் செல்வம், செய்யாறு மோகன் ஆகியோர் தினகரனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதனிடையே சற்றுமுன் பரமக்குடி எம்எல்ஏ முத்தையா மற்றும் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கூடாரம் காலியாகி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்த எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.