இயக்குனர் அட்லீயை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன வசனம்.. என்ன நடிப்பு.. விஜய் கண்டிப்பாக வேற லெவல்.. 

சர்கார் படத்தில் வில்லி கோமளவல்லியாக நடித்த நடிகை வரலட்சுமி பிகில் திரைப்படத்தை பார்த்து விட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டித் தள்ளி இருக்கிறார். 

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் பல திகில்களை சந்தித்து இன்று காலை வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முக்கிய பெரிய நகரங்களில் இன்று அதிகாலை. 4.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. விஜய் ரசிகர்கள் பலரும் அக்காட்சிகளை கண்டு களித்தனர்.

மகன், தந்தை என இருவேடங்களில் விஜய் தந்தை ராயப்பனாகவும் மகன் மைக்கேலாகவும் இரு வேடத்தில் விஜய் அசத்தியிருப்பதாகவும், விஜயின் சினிமா வாழ்வில் ராயப்பன் கதாபாத்திரம் ஒரு மைல்ஸ்டோனாக இருக்கும் எனவும் நன்றாக நடித்திருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Scroll to load tweet…

இந்நிலையில், இப்படத்தின் இன்று அதிகாலை காட்சி ரசிகர்களுடன் பார்த்த நடிகை வரலட்சுமி ‘இயக்குனர் அட்லீயை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன வசனம்.. என்ன நடிப்பு.. விஜய் கண்டிப்பாக வேற லெவல்.. இப்படத்தை தயாரித்ததற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி.. வெறித்தனமான தீபாவளி’என பதிவிட்டுள்ளார். வரலட்சுமி முன் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்தவர்.