பேராவூரணி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. கோவிந்தராசுவிற்கும் அவரது உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. கோவிந்தராசுவிற்கும் அவரது உதவியாளருக்கும் கடந்த 20 ஆம் தேதி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.