மேலும் அதில், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றும்,  

விநாயகர் சதுர்த்தியான இன்று, தனது வீட்டு வராண்டாவில் விநாயகர் சிலை வைத்து படையலிட்டு, பளபளக்கும் வெள்ளைநிற வேட்டி சட்டையில் விநாகரை வணங்கி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் அவர் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று அவர் பதிவிட்டு இருப்பதே மிகுந்தவரவேற்பைப் பெற்றுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கொரோனா தொற்றுக்கு இடையிலும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பின்னர் அதை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் ஒரு சில இடங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பெருவாரியாக மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். 

முன்னதாக விநாகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து ஊர்வலம் நடத்திட பல்வேறு போராட்டங்கள் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வந்தது ஆனாலும் தமிழக அரசு பிடிவாதமாக அதற்கு அனுமதி வழங்கவில்லை, இதனால் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வீட்டு வராண்டாவில் விநாயகர் சிலை வைத்து தலைவாழை இலை போட்டு சுண்டல், பொறி, கரும்பு, தேங்காய், மற்றும் பழ வகைகளை வைத்து படையலிட்டு வெள்ளை நிற வேட்டி சட்டையில் பணிவுடன் தான் விநாயகரை வணங்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றும், விநாயகரை நினைந்து செய்யும் அனைத்து செயல்களையும் சிறப்பாக முடித்துத் தருவார்! என்றும் பதிவிட்டு அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பலரும் லைக் செய்து வருகின்றனர்.