தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையுலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நாளை வழங்கப்படுகிறது. இது குறித்து இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இந்த தருணத்தில் என் குருநாதர் பாலச்சந்தர் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது என்றார்.

இந் நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

மத்தியஅரசாங்கத்தின்சார்பாகபாரதப்பிரதமர்திரு @narendramodi அவர்கள்அரசு, சினிமாதுறையில்மிகஉயரியவிருதான "தாதாசாகேப்பால்கே" விருதைசூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குநாளைவழங்கவிருக்கின்றதுஎன்றசெய்திபெரும்மகிழ்ச்சியைத்தருகின்றது! நல்வாழ்த்துக்கள்சார்! என்று பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…