எனவே கட்சி எங்கெங்கெல்லாம் வலுவிழந்து இருக்கிறதோ அந்த இடங்களை அடையாளம் கண்டு வலுப்படுத்தும் வேலையின் அண்ணாமலை முழுமையாக இறங்கியுள்ளார். 

தமிழகத்தில் 8 பாஜக மாநில தலைவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர், அவர்களின் தலைமையின் கீழ் இயங்கிவந்த அனைத்து அணிகளும் கூண்டோடு கலைக்கப் படுவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் செயல்படாத மாவட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அண்ணாமலை பல முறை எச்சரித்து வந்த நிலையில், தற்போது 8 மாவட்ட தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் பாஜகவில் அதிரடிக்கு மேல் அதிரடி சம்பவங்கள் நடந்து வருகிறது. கடமை தவறாத காக்கி ஆபிஸர் கடமை தவறாத காவி ஆபீஸர் ஆகியிருப்பதை இந்த அதிரடிக்கு காரணம் என்றே சொல்லலாம். அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவின் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லை. அந்த அளவிற்கு காட்சியை உயிர்ப்புடனும், ஈர்ப்புடனும் நடத்தி வருகிறார் அண்ணாமலை. அவரின் பேச்சில் தெளிவு, செயலில் வேகம் பலரையும் கவர்ந்திருக்கிறது. இளைஞர்கள் பெண்கள் அதிக அளவில் பாஜகவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். எவரையும் மென்மையாக அணுகும் பண்பு கொண்ட அண்ணாமலை கண்டிப்புக்கு பஞ்சம் இல்லாதவர் என்பதை இப்போது அவரின் இந்த நடவடிக்கை காட்டியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியை காட்டிலும் தனித்து போட்டியிட்டால் அது கட்சிக்கு ப்ளஸ்சாக அமையும் என்றும், அதனால் தனித்து போட்டியிடுவதே சாலச் சிறந்தது என்றும் துணிந்து முடிவு செய்தார் அண்ணாமலை. அதன் விளைவாக அதிகப்படியான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது கட்சிக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும். அதில் பாஜக திருப்தி அடைந்துவிடவில்லை என்றே சொல்லலாம். பாஜகவின் இலக்கு இது அல்ல, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தான் என்பது விஷயம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். 2024 தேர்தலே அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களில் இலக்காக இருந்து வருகிறது. தேர்தலுக்கு குறுகிய காலம் இருப்பதால் கட்சியை அடிமட்டத்திலிருந்து கட்டமைக்க வேண்டும் என்ற முயற்சியில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார்.

எனவே கட்சி எங்கெங்கெல்லாம் வலுவிழந்து இருக்கிறதோ அந்த இடங்களை அடையாளம் கண்டு வலுப்படுத்தும் வேலையின் அண்ணாமலை முழுமையாக இறங்கியுள்ளார். அதன் தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாகவே மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை அவர் எச்சரித்து வந்தார். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்க வேண்டும், அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், கட்சிப் பதவியை வெறுமனே சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு கட்சிக்கு உழைக்க தயாராக இல்லாதவர்கள் கட்சியை விட்டே விலகலாம் என்றும், இல்லை என்றால் அவர்கள் அனைவரும தூக்கி எறிய படுவார்கள் என்றும் அவர் எச்சரித்து வந்தார்.

இந்நிலையில்தான் கட்சிக்கு ஒத்துவராத சில மாவட்ட தலைவர்களின் பதவிகளை அவர் பறித்துள்ளார். திருநெல்வேலி, நாகை , சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை , ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அவர்களின் கீழ் செயல்பட்டு வந்த அணிகள், பிரிவுகள் மற்றும் அதையொட்டி இயங்கிவந்த மாவட்ட கமிட்டிகள் அனைத்தும் கூண்டோடு கலக்கப்படுவதாகஅவர் அறிவித்துள்ளார். அந்த இடத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக கீழ்க்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து, புதிய மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளார்.

அதன்படி 1.நெல்வெளி -ஜோதி, 2. நாகை வரதராஜன், 3.சென்னை மேற்கு மனோகரன், 4. வட சென்னை மேற்கு- பாலாஜி, 5. கோயம்புத்தூர் நகர்-முருகானந்தம், 6. புதுக்கோட்டை - செல்வ அழகப்பன், 7. ஈரோடு வடக்கு செந்தில்குமார் , 8. திருவண்ணாமலை வடக்கு ஏழுமலை. ஆகியோர் தற்காலிக மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக தனித்து போட்டியிட்டாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவை மக்கள் அங்கீகரித்திரிந்தனர். குறிப்பாக நாகர்கோவில் மாவட்டத்தில் கணிசமான வார்டுகளை பாஜக கைப்பற்றியது. தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் ஒரு வார்டை கைப்பற்றியுள்ளது. ஆனால் பாஜகவின் செல்வாக்கு மிகுந்த பகுதியான கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. 

குறிப்பாக கொங்கு மண்டலமான கோவை ஈரோடு போன்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை அதனால் அம்மாவட்டத் தலைவர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாஜகவுக்கு ஆதரவு மிக்க பகுதியாக இருக்கக்கூடிய திருநெல்வேலி மாவட்டத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அந்த மாவட்டத்தில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால மாவட்ட செயல் தலைவர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ தகவல் அக்கட்சியால், மாநிலத்தலைவர் அண்ணாமலையால் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.