தமிழ் தாய் வாழ்த்து பாடலின் மெட்டும், டியூன் சரியில்லாததால் தான் பாதியில் நிறுத்தப்பட்டது..! அண்ணாமலை விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும், அண்ணன் ஈ.பி.எஸ் அவர்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்களுக்கு பொது எதிரி திமுக தான். மக்களவை தேர்தலில் புதுவையையும் சேர்த்து, 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பா.?
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சிவமொக்கா பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் துணை முதலமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார். அப்போது கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரப்பா பாடிக்கொண்டிருந்த தமிழ்தாய் வாழ்த்து பாடலை நிறுத்த கூறினார். இந்த சம்பவம் பரபர்ப்பை ஏற்படுத்திய நிலையில் மேடையில் இருந்த அண்ணாமலை எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தார்.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கட்டணம் தெரிவித்துள்ளனர்.
<p>
மெட்டும், டியூனும் சரியில்லை
இந்தநிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சமுதாய மக்கள் தேர்தல் பரப்புரைக்காக மேடையில் அமர்த்திருந்தார். அந்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு ஆரம்பிக்கும் போது கர்நாடக மாநில பாடல் போட சொன்னார். ஆனால் ஆப்ரேட்டர் தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஒளிபரப்பினார். தமிழ்தாய் வாழ்த்தும் சரியான பாட்டாக இல்லை, டியூனும் மெட்டும் சரியில்லை. இதுவும் நமது தமிழ்தாய் வாழ்த்துவை அவமதிப்பது போல் இருந்தது. பாடல் போட்டதும் மரியாதை கொடுத்து நான் எழுந்து நின்றேன். அதே நேரத்தில் மெட்டும் டியூனும் நம்முடைய லைனில் இல்லை. இங்கே அதை பலோ பன்னவில்லை. ஏன் என்றால் இங்கு தமிழ்தாய் வாழ்த்து பாடல் தினமும் போடுவது இல்லை.
ஈஸ்வரப்பா செய்ததில் தவறு இல்லை
ஈஸ்வரப்பா கவனத்திற்கு வந்ததும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிறுத்தப்பட்டது. காரணம் பாட்டின் டியூன் சரியில்லை. இரண்டாவது இங்கு ஒரு பாடலை போடனும்னா முதலில் கர்நாடக பாடலை முதலில் போடனும், தமிழ்நாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றால் தமிழில் பாடல் போடனும் . இது தான் நீதி, அதைத்தான் ஈஸ்வரப்பா செய்தார். அவர் செய்ததில் எந்த தவறும் இல்லை. மெட்டு சரியில்லை. இதனையடுத்து அந்த பாடலை போட நான் விடவில்லை. இங்கு யாராவது தமிழ் தாய் வாழ்த்து பாடுவதாக இருந்தால் பாட சொல்லுங்கள். இல்லைனா வேண்டாம் என்று கூறி விட்டேன். இது மேடையில் இருந்தவர்களுக்கு தெரியும். இதை வைத்து திமுக அரசியல் செய்தால் நான் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்