Asianet News TamilAsianet News Tamil

போரில் மரணம் அடையும் வீரரின் மனைவியை தூக்கி சென்று விடுவார்கள்.. இதனாலே உடன்கட்டை ஏறுனாங்க- அண்ணாமலை விளக்கம்

போர்கள் நடந்த போது தோற்றவர்களின் மனைவிகளை கவர்ந்து செல்வதை தவிர்க்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள். பெண்கள் உடன்கட்டை ஏறுவது சனாதன தர்மம் சொல்லாத ஒன்று என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Annamalai said that Sanatana Dharma is not always an enemy of other religions Kak
Author
First Published Sep 12, 2023, 10:56 AM IST

பாஜக போராட்டம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்க கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் மத்தியில் பேசிய அண்ணாமலை,  சனாதன தர்மம் யாருக்கும் எதிரியல்ல. சனாதன தர்மத்திற்கு ஆதியும் இல்லை, முடிவும் இல்லை.இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கும் முன்பாக உருவானது சனாதன தர்மம். சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எப்போதும் எதிரியல்ல என தெரிவித்தார். 

Annamalai said that Sanatana Dharma is not always an enemy of other religions Kak

உடன்கட்டை ஏறுவது ஏன்.?

தொடர்ந்து பேசியவர், விதவைகள் உடன்கட்டை ஏறுவது எப்போது வந்தது. சனாதனம் கொண்டு வந்ததா.? அந்நிய படையெடுப்பு வந்த பிறகு போரில் ராஜாவோ அல்லது வீரரோ கொல்லப்பட்டால், அவருடைய மனைவி, தங்கையையோ, அம்மாக்களையும் போரில் வென்ற பரிசு பொருளாக  வெள்ளையர்கள் எடுத்து சென்றார்கள். சனாதனத்தைப்பற்றி புரியாதவர்கள் ஆதிக்கத்தில் வந்தவர்கள் போரிலை கொல்லப்பட்ட பிறகு அந்த பெண்களை இங்கிருந்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். இதன் காரணமாகவே கணவன் இறந்த பிறகு பெண்கள் தங்களின் கணவரோடு உடன்கட்டை ஏறினார்கள். இது சனாதனத்தில் வரவில்லை. பெண்கள் தங்களின் கற்பை காப்பாற்ற ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு என தெரிவித்தார். 

Annamalai said that Sanatana Dharma is not always an enemy of other religions Kak

திராவிடர் கழகம் இருந்ததா? பெரியார் இருந்தாரா?

ராஜாராம் மோகன்ராய் என்ற சனாதனி தான் பெண்கள் உடன்கட்டை ஏறுவதை முடிவுக்கு கொண்டு வந்தார். அப்போது திராவிடர் கழகம் இருந்ததா? பெரியார் இருந்தாரா? குஜராத்திலிருக்கும் ஒரு சனாதனி தான் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுத்தார். 18 லிருந்த பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியவர் பிரதமர் மோடி எனவும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சேகர்பாபுவுக்கு எதிராக சீறிய பாஜக... அண்ணாமலை மீது வழக்கு பதிவு... அதிரடியாக களம் இறங்கிய தமிழக போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios