Asianet News TamilAsianet News Tamil

அமைச்சருன்னு சொல்றீங்க… இது கூட புரியாம இருக்கீங்க..? அண்ணாமலையின் செம பங்கம்…

தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாடம் எடுத்துள்ளார்.

Annamalai reply KKSSR ramachandran
Author
Chennai, First Published Nov 13, 2021, 8:14 PM IST

சென்னை: தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாடம் எடுத்துள்ளார்.

Annamalai reply KKSSR ramachandran

வடகிழக்கு பருவமழையானது 2 வாரங்களாக தமிழகத்தை துவம்சம் செய்து வருகிறது. சென்னையில் 2015ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் படகில் பயணம் என்பது சாத்தியமாகி இருக்கிறது. மழையில் சென்னை மிதக்க அரசோ நிவாரண பணிகளில் முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது.

வழக்கம் போல எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை வசைபாடி, 2015ம் ஆண்டு அரசுக்கு கை கொடுத்த தன்னார்வலர்கள் இப்போது காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுக்கான அழைப்பு அரசின் இருந்து போயிருக்கிறது.

Annamalai reply KKSSR ramachandran

சென்னை என்றில்லை… திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை என பல மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர்.

நிலைமைகள் எல்லாம் கன்னத்தில் மக்கள் கை வைக்கும் அளவுக்கு இருக்க, நிவாரண பணிகள் வேகம் எடுத்துள்ளன. மழை, அரசின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Annamalai reply KKSSR ramachandran

அப்போது அவர் மத்திய அரசை குற்றம்சாட்டி சில கருத்துகளை முன் வைத்தார். அவர் பேசியது இதுதான்: ஆண்டுதோறும் தமிழகத்துக்கு மத்திய அரசானது பேரிடர் நிவாரண நிதியாக 1350 கோடி ரூபாய் அளிக்கும். 2020 – 2021ம் ஆண்டுக்கான நிதியில் இன்னமும் 300 கோடி ரூபாய் பாக்கி உள்ளது என்று கூறி இருந்தார்.

இந்த கருத்தை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு தமிழக அரசுக்கு மத்திய அரசானது பேரிடர் மேலாண்மை நிதியை தராமல் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் அது அப்படி அல்ல என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை பங்கம் செய்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

ம் தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்கு தொகையான 1020 கோடி ரூபாயை விடுவித்து விட்டது என்றும், பாக்கிதொகை தமிழக அரசு தான் தர வேண்டும் என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி.

Annamalai reply KKSSR ramachandran

2020-21 ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி-1,360 கோடி. இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை  ஜூலை 31 ஆம் தேதி அளித்துவிட்டது. நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம்  முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன். நன்றி.. வணக்கம் என்று கூறி சில ஆவணங்களையும் அண்ணாமலை இணைத்துள்ளார். அண்ணாமலை இணைத்துள்ள ஆவணத்தை உற்று நோக்கினால் தமிழக அரசு நிதியை விடுவிக்கவில்லை என்பது புலப்படுகிறது.

ஆனால் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஏன் மத்திய அரசு மீது புகார் கூறினார் என்பது தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த விளக்க அறிக்கை அவரிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்….!

 

Follow Us:
Download App:
  • android
  • ios