மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.
சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் முறைகேடுகள் நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மின் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகையை அனுப்ப 4 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர் என்ற அதிரடி குற்றச்சாட்டை டுவிட்டர் பதிவு மூலமாக அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவுக்கு மின்துறை அமைச்சர் சுடச்சுட பதிலும் அளித்து பரபரக்க வைத்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாகவது:
மின்வாரியதுறையில்முறைகேடுநடந்துள்ளதெனதிரு.அண்ணாமலைகூறியதற்குஆதாரத்தைகேட்டால், வாரியஅலுவலகத்திற்குஅனுப்பியநிதியை, யாருக்குஅனுப்பியதுஎன்பதுதெரியாமல், திருட்டுத்தனமாகஎடுக்கப்பட்டஅந்த Excel கையில்இருந்தும்,அந்ததொகையையும் 29.99 கோடியெனசரியாகஎழுதகூடதெரியாமல்,
All purpose அதிமேதாவியாகஎண்ணி, 4% கமிஷனெனமீண்டும்பொய்புகார்கூறிகழகஆட்சிக்குஅவப்பெயர்ஏற்படுத்தப்பார்க்கும்அண்ணாமலைஇதற்கானஆதாரத்தையும்இன்றேவெளியிடவேண்டும். இல்லை, அவர்களதுவழக்கப்படிமன்னிப்புகேட்கவேண்டும்.
2021 மார்ச்மாதம்முதல் 06.05.2021 வரை, மின்கொள்முதல், தளவாடகொள்முதல்மற்றும்ஒப்பந்ததாரர்களுக்குசேரவேண்டியரூ. 15541 கோடிநிலுவையில்இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்துநிதிவந்தபின், தலைமைநிதிகட்டுப்பாட்டுஅலுவலகத்தில்
நிலுவைதொகைகள்சரிபார்க்கப்பட்டு, அந்தந்தமின்பகிர்மானமற்றும்மின்உற்பத்திவட்டத்திற்குரியமேற்பார்வைமற்றும்தலைமைபொறியாளர்கள்அலுவலகவங்கிகணக்குகளுக்குஅனுப்பப்பட்டு, பின்னர்சம்பந்தப்பட்டநிறுவனங்களுக்குவழங்கப்பட்டது. இதுவேவழக்கமானநடைமுறைஎன்று பதில் அளித்துள்ளார்.
இந்த பதிவுகளுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதில் கொடுத்துள்ளார். அதில் அதிமுக ஆட்சியின் போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசிய வீடியோ பதிவு ஒன்றையும் தமது டுவிட்டர் பதிவில் இணைத்து வெளியிட்டு உள்ளார்.
