தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.! டாஸ்மாக் கடை மூடப்படும்- அண்ணாமலை
குடும்ப ஆட்சியை பிரதமர் மோடி அடியோடு வெறுகிறார். கோபாலபுரத்தில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் உள்ள எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி என திமுகவினர் அனைவரும் குடும்ப ஆட்சி செய்வதாக அண்ணாமலை விமர்சித்தார்.
மக்களை அடிமை போல் நடத்தும் திமுக அரசு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், 70 ஆண்டு காலம் ஆரணி நகராட்சி வளர்ச்சி அடையவில்லை. ஆரணி பற்றி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று முறை பேசி உள்ளார். ஆரணி பட்டு, நாகநதி ஆறு மற்றும் ஜல்ஜீவன் திட்டம் பற்றி பேசி இருக்கார். ஆனால் ஆரணி பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்கையாவது பேசி இருக்காரா? என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு 1000 ரூபாய் வழங்கிவிட்டு மக்களை அடிமை போல் நடத்துகின்றனர்.
அண்ணாமலை மீது 3 பிரிவில் பாய்ந்தது வழக்கு.. அதிரடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு- காரணம் என்ன.?
குடும்ப ஆட்சியை வெறுக்கும் மோடி
ஆனால் 8.5 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு ஆண்டுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி என தெரிவித்தார். ஊழல் இல்லாத அரசாக மத்தியில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி செய்தது. 76 அமைச்சர்களும் நேர்மையானவர்கள். அயோத்தியில் ராமர் கோவிலை யாரையும் மிரட்டி கட்டவில்லை. அனைத்து மக்களையும் ஒன்றினைத்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து கட்டிய கோவில் தான் ராமர் கோயில், மத்தியில் 10 ஆண்டு காலமாக ஜனநாயகம் திகழ்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் குடும்ப ஆட்சி தழைத்தோங்கி வருகிறது. மோடி குடும்ப ஆட்சியை அடியோடு வெறுகிறார்.குடும்ப ஆட்சி கோபாலபுரத்தில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் உள்ள எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி என அனைவரும் குடும்ப ஆட்சி செய்கின்றனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
தமிழகத்தில் இரு மொழி ஆட்சி அடியோடு ஒழிய வேண்டும், தமிழகத்தில் 70 ஆண்டு காலம் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் 5 மொழியை பாஜக கொண்டு வரும். மக்களின் விருப்பத்திற்கு போல் மொழி கல்வி கறகலாம், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை, டாஸ்மாக் கடையை குறைத்து கள்ளு கடையை திறக்கப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் மோடிக்கு எதிராக களம் காண வேட்பாளர் யாரும் இல்லை. பிரதமர் வேட்பாளர் என்றால் இந்தியாவில் மோடி அவர்கள் மட்டுமே. 2024 தேர்தலை பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒரே வேட்பாளர் மோடி என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்