Asianet News TamilAsianet News Tamil

ஒரு நாள் சிறைக்குப் போனால் ஒரு வருட கட்சி பணியை செய்ததற்கு சமம்.!கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர்-அண்ணாமலை

தி.மு.க.,வை பார்த்தாலே அகில இந்திய தலைவர்கள் ஓடுவதாக தெரிவித்த அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்தார்
 

Annamalai has said that BJP is not afraid of DMK government arrest
Author
First Published Jun 21, 2023, 7:59 AM IST

மழை பாதிப்பு- அமைச்சர்கள் எங்கே.?

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில்  பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் வேத சுப்பிரமணியன் தலைமையில்  நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில். ஊழல் வழக்கில் கைதாகி நெஞ்சு வலி என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு 100 மீட்டர் ரேசில் ஓடுவது போல் ஓடிய அமைச்சர்கள் சென்னையில் நேற்று பெய்த மழையின் போது பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது ஒரு அமைச்சர் கூட அதை பார்ப்பதற்கு வரவில்லையென விமர்சித்தார். 

Annamalai has said that BJP is not afraid of DMK government arrest

கோட் போட்டால் மோடி ஆகமுடியாது

கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர் என கூறியவர், கைது செய்தால் தான் கட்சி வளரும்.ஒரு நாள் சிறைக்குப் போனால் ஒரு வருட கட்சி பணியை செய்ததற்கு சமம் என தெரிவித்தார். திமுக அரசால் கைது செய்யப்பட்டால் அடுத்த 6 மணி நேரத்தில் பாஜகவினர் வெளியே வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு பாஜக சட்டப்பிரிவு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். திமுகவினர் போல் கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என கூறவில்லை எனவும் விமர்சித்தார்.  பிரதமரின் அமெரிக்க பயணம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய செய்யும். வெளிநாட்டு பயணத்தில் இருந்து, 3 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சத்தியமாக அது வராது. கோட் போட்டால் மோடி ஆக முடியாது என தெரிவித்தவர், தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் ஆட்சியை, முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். 

Annamalai has said that BJP is not afraid of DMK government arrest

ஸ்டாலினை பார்த்து பயப்படும் தேசிய தலைவர்கள்

தி.மு.க., வினர் அடித்த கொள்ளையை பார்த்து, காங்கிரஸ் கட்சியினரே பயந்து விட்டனர். அதனால் தான், 2009ல், மத்திய அமைச்சரவையில், டி.ஆர்.பாலுவிற்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும், 55 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏகப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  தி.மு.க.,வை பார்த்தாலே, அகில இந்திய தலைவர்கள் ஓடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் மோடி பிரதமர் ஆவது உறுதி என தெரிவித்தார். ஆனால் வெற்றி பெறும் தொகுதிகள் 399 ஆ அல்லது 400ஆ என்று தான் முடிவாகவில்லையென அண்ணாமலை கூறினார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை தமிழகத்தின் தலைவர் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவின்? புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்..!

Follow Us:
Download App:
  • android
  • ios