Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசு உருவாக்கியது உண்மைச் சரிபார்ப்புக் குழு அல்ல.. உண்மைக்கு அப்பாற்பட்ட குழு-கிண்டல் செய்யும் அண்ணாமலை

திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் குழு என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai has criticized that the DMK government set up is not a fact finding committee KAK
Author
First Published Feb 23, 2024, 12:11 PM IST | Last Updated Feb 23, 2024, 12:11 PM IST

மத்திய அரசு திட்டங்களுக்கு மாற்று பெயரா.?

மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசு உருவாக்கியுள்ள உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்தது. சீர்மிகு நகரங்கள் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு இடையேயான வேறுபாடுகளை விளக்கியிருந்தது. இதே போல பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆகிவற்றுக்கான வேறுபாடுகளையும் கூறியிருந்தது. இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  

உண்மை சரிபார்ப்பு குழு- அண்ணாமலை பதில்

திமுக அரசு கூறுவதை உண்மை என்று முன்வைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும், தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பாளர் என்று கூறிக்கொள்பவர் கூற்றைச் செய்தியாக்க, கோபாலபுரம் ஊடகம் களமிறங்கியதிலும் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கியதிலும் ஆச்சரியமில்லை. எனவே, இங்கே சில உண்மையான ஆதாரங்களை முன்வைக்கிறோம்:

1) PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ₹2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 

 

 

2) 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ₹6921 கோடி. ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

மத்திய அரசு நிதி எவ்வளவு.?

3) இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால்,  எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.  மத்திய அரசின் பங்கு: ₹2004.39 கோடி, மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி. தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது.  ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது. கடந்த 2022-23 நிதியாண்டில், ரூ.555.89 கோடி செலவழித்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது உண்மையாகச் செலவிட்ட நிதியை விட ₹269.81 கோடி அதிகமாகும். இதைக் குறித்து தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறிக்கொள்ளட்டும்.

சுருக்கமாகக் கூறினால், PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது. உண்மைச் சரிபார்ப்புக் குழு என்று அழைத்துக் கொள்ளும் தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Fact Check : மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டமாக அறிமுகம் செய்கிறதா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios