உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். அது கைத்தட்டலை வேண்டும் என்றால் வாங்கி தரும்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அறிவித்தபிறகும், பா.ஜ.க. முறைப்படி அறிவிக்கவே இல்லை. ஆகவே, கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் கீழ்மட்ட தொண்டர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், காரமடையில் பேசிய பா.ஜனதா துணைத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்தவித குழப்பமும் கிடையாது. எங்கள் கூட்டணி ஒரே நேர் கோட்டு பாதையில் பயணித்து வருகிறது‘ என்று தெரிவித்துள்ளார்.
‘கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் தி.மு.கவுக்கு ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்கவில்லை. இனி வரும் 5 ஆண்டுகளும் தி.மு.க.வுக்கு மக்கள் ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்க மாட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்துவது மக்கள் கிராமசபை கூட்டம் கிடையாது. அது தி.மு.க தொண்டர்களின் கூட்டம். உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். அது கைத்தட்டலை வேண்டும் என்றால் வாங்கி தரும். ஆனால் அந்த கைத்தட்டல்கள் அனைத்தும் வாக்காக மாறாது என்பது அவருக்கு தேர்தலின் முடிவில் புரியும்.
வேல் யாத்திரைக்கு பிறகு 8.5லட்சம் பேர் வேல் பூஜை செய்துள்ளனர். இது பொறுக்க முடியாமல் தான் திருமாவளவன் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறு பேசி வருகிறார். வருகிற தேர்தலில் இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பேசி இருக்கிறார். ஆக, அ.தி.மு.க. கூட்டணியில் எல்லாமே அப்படியே செட்டாகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 5:56 PM IST