அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை.! கனிமொழியின் தமிழ்தாய் வாழ்த்துபதிவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

 நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?  என திமுக எம்பி கனிமொழி பதிவுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

Annamalai explanation of what happened in the Tamiltai issue

கர்நாடகவில் தேர்தல் பிரச்சாரம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வாக்கு பதிவிற்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சிவமொக்கா தொகுதியில் கர்நாடக பாஜகவில் மூத்த தலைவரான கே. எஸ். ஈஸ்வரப்பா போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காத காரணத்தால் விரக்தி அடைந்த அவர், தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார். பிரதமர் மோடி நேரடியாக ஈஸ்வரப்பாவிடம் பேசி சமரசம் செய்தார். இதனையடுத்து ஈஸ்வரப்பா பல்வேறு பகுதியில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஈஸ்வரப்பா,தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பாஜகவுக்கு ஒரு இஸ்லாமியரின் வாக்கும் வேண்டாம் என்று கூறினார். 

தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை.! மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்- கனிமொழி

Annamalai explanation of what happened in the Tamiltai issue

முஸ்லீம்கள் வாக்கு வேண்டாம்

அதுமட்டுமின்றி பாஜகவுக்கு வாக்களிக்கும் முஸ்லீம் தேசபக்தர்கள் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் வாக்களிக்கட்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தம் வகையில் பிரச்சார மேடையில் ஈஸ்வரப்பா செயல்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில்  சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார். அப்போது கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரப்பா பாடிக்கொண்டிருந்த தமிழ்தாய் வாழ்த்து பாடலை கேட்டதும் நிறுத்த கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேடையில் இருந்த அண்ணாமலை எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தார்.

Annamalai explanation of what happened in the Tamiltai issue

தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

கர்நாடக பிரச்சாரத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனமொழி அவர்களே, ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். 

<

 

மக்களை காப்பாற்றுவதே ஒரே பணி

நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? "கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

Watch Video: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios