ட்ரோல் வீடியோ வெளியிட்டதற்காக கைது என்றால்.!ஒட்டுமொத்த திமுக ஐடி பிரிவும் சிறையில் அடைக்கனும்- சீறும் அண்ணாமலை
சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து கருத்து பதிவிடுவது குற்றம் என்றால், திமுகவின் ஐடி விங் முழுநேர வேலையே இதுவாகத்தான் இருக்கிறது. அவர்களை தான் ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கனும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தகுதியுள்ளவர்களுக்கு உரிமை தொகை
தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில், தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்றும், செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும் என கூறினார்.
பெண்களை விமர்சித்து வீடியோ
இந்த அறிவிப்பிற்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியிருப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சமூக வலைதளத்தில் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் நடிகர் கவுண்டமனி, செந்தில் காமெடி காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் யூ செலக்டட், யூ ரிஜெட்டட் என காட்சிகள் உள்ளது இதனை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பெண்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து
சவுக்கு சங்கர் ஆதரவாளர் கைது
மகளிர் ஆணையம் மற்றும் திமுகவினர் சார்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் டுவிட்டர் பக்கத்தின் அட்மின் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்திற்கு அதிமுக- பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்தவரை கைது செய்து சர்வாதிகாரப் போக்கை திமுக அரசு வெளிப்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கண்டனம்
ஒரு குடும்பத்தின் கையில் அதிகாரம் இருந்தால் இதுதான் நிலை. சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து கருத்து பதிவிடுவது குற்றம் என்றால், திமுகவின் ஐடி விங் முழுநேர வேலையே இதுவாகத்தான் இருக்கிறது. அவர்களை தான் ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கனும் என தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை பறிப்பது, நள்ளிரவில் கைது செய்வது, எந்த சாதனையும் இல்லாமல் வெறும் சுய விளம்பரம் போன்றவை பாசிசவாதியின் உண்மையான குணம் முதலமைச்சர் ஸ்டாலின், என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்