இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிர்வாக செலவுகளையும் ஊழல்களையும் ஆய்வு செய்து வருகிறார். அனைத்து பல்கலைக்கழகத்திலும் மறைமுகமாக செலவிடப்படும் செலவு கணக்குகள் பல கோடி ரூபாய்களை தாண்டுவதாக சமீபத்தில் ராஜ்பவனின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கார்கள் அமைச்சர் அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதும், அந்த கார்களுக்கான பெட்ரோல் டீசல் செலவை இதுவரை அண்ணா பல்கலைக் கழகம் கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனால், அமைச்சரின் கார் பெட்ரோல் செலவை பல்கலைக்கழகம் ஏற்கத் தேவையில்லை என உத்தரவு வந்ததால்,  அமைச்சரின் கார் பெட்ரோல் பில்லுக்கு பணம் தரமுடியாது என  அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் கார்களையும் கட் பண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். காரணம், அமைச்சருக்கும், செயலாளருக்கும் அரசு தரப்பில் கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் சார்பில் எதற்கு கார்கள் ஒதுக்கப்பட வேண்டும்  என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர்.