அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 6-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. 

தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் கூடுவது வழக்கம். ஒரு சட்டப்பேரவை கூட்டதொடருக்கும் மற்றொரு கூட்ட தொடருக்குமான கால இடைவெளி 6 மாதங்களை தாண்டி இருக்க கூடாது என்பது விதியாகும். இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதியுடன் பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது. எனவே, அடுத்த கூட்ட தொடர் வரும் ஜனவரி 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.


 
இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கூட்ட தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் கூட்ட தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஜனவரி 6-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்தும், குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.