கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தலைவர் ஜெகன் மோகன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

அவரது அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக  பொறுப்பேற்றவர் புஷ்பா ஸ்ரீவாணி .  

இவர் பழங்குடியினர் நலவாழ்வு துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராக தற்போது உள்ளார்.கடந்த வருடம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று பதவியேற்றபோது அவரை புகழும்படியாக ' ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா' என்ற தெலுங்கு பாடல் ஒன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து, புஷ்பா ஸ்ரீவாணி டிக் டாக்கில் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே வேளையில் துணை முதலமைச்சராக  இருப்பவர் இவ்வாறு டிக் டாக் வீடியோ பதிவு செய்து வெளியிடலாமா ? என்று  விமர்சனங்கள் எழுந்துள்ளன.