ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம் கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என விஜய்யை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் அரசியலுக்கு அழைக்கப்படும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .  அந்த போஸ்டரில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர் நடிகர் விஜய் ஆரம்பிக்கப் போகும் அரசியல் இயக்கத்திற்கு அச்சாரமாக விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்து மக்களை சந்தித்து வருகிறார் கடந்த ஆண்டு திரைக்கு வந்த சர்க்கார் திரைப்படத்தில் மத்தியஅரசின் கடுமையாக விமர்சித்து அதன் காரணமாக பாஜகவினர் விஜய் கடுமையாக  எதிர்த்து வருகின்றனர் .

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மாஸ்டர் படப்பிடிப்பு சூட்டிங் நடந்து கொண்டிருந்தது .  அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் கார் மூலமாக சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் .  இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது .  விஜய் வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சுமார் 300 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது பின்னர் அது போல பணமோ ஆவணங்களோ பின்பற்றப்படவில்லை என தகவல் வந்தது .  ஆனால் இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .  விசாரணை முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்ற விஜய்  அங்கு குவிந்திருந்த  ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . 

அப்போது ஒரு  வேன் மீது ஏறி அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .  இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் நாங்கள் தளபதி விஜய்யுடன் நிற்கோறோம்  என ஹாஸ்டாக்கை  டிரெண்ட் ஆக்கினர் இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது .  அதில்  விஜயுடன் அமர்ந்துள்ள பிரசாந்த் கிஷோர் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் , ஆந்திராவில் நாங்கள் காப்பாற்றி விட்டோம் கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் ,  மக்கள் நலன் கருதி களம் இறங்குங்கள் என்று அரசியலுக்கு அழைப்பது போன்ற அப்படம் அமைந்துள்ளது இந்த போஸ்டர் மதுரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.