கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஈமசடங்கு செய்வதற்காக தலா ரூ15ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உடனே அமல்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ரூ.15,000 வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
 


ஆந்திராவில் இதுவரை 36,221 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,144 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. இதுவரை 365 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 16,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கென்று தனி தனி கழிப்பறைகள் மருத்துவமனைகளில் இல்லை எனவே இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான மருந்து பெட்டகம் அரசாங்கமே இலவசமாக வழங்கியிள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றால் இறந்தவருக்கு ஈமசடங்கு செய்ய ரூ15ஆயிரம் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.