ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு டாக்டர்கள் யாரும் இனி தனியாக கிளினிக் வைத்து நடத்தக்கூடாது என அம்மாநில முதலலைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார், அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இலவச மருத்துவ சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அரசு மருத்துவ மனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் வறுமையே தங்களை வாட்டினாலும், நோய் நொடி வந்துவிட்டால் அவர்கள் நாடிச்செல்வது தனியார் மருத்துவமனைகளுக்குத்தான். அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.  இதற்குக் காரணம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைகிறதோ இல்லையோ, மரியாதை கொஞ்சம் கூட கிடைக்காது என்பதுதான் காரணம். அரசு மருத்துவமனைக்கு சென்றால் பிச்சைக்காரர்களை துரத்துவது போல ஏழை மக்களை நடத்துவார்கள். நோயாளியை அருகில் கூட நெருங்க விட மாட்டார்கள் , இதே அவர்கள் நடத்தும் கிளினிக்குக்கு சென்றால்  இனிக் இனிக்க பேசுவார்கள்.  என்பது தான் அரசு மருத்துவர்களின் மீதுள்ள பொதுவான குற்றச்சாட்டு.

 

இந் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இதே புகார்கள் எழுந்தது. இது குறித்து உடனே ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் ரெட்டி.  அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்தனர். அதில் அரசு மருத்துவர்கள் நேரத்திற்கு மருத்துவ மனைக்கு வருவதில்லை, மாலையில் சீக்கிரத்தில் வீடு திரும்பி விடுகின்றனர். நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அல்லல் படுகின்றனர், மருத்துவர்களால்  புறக்கணிக்கப்படும் அவலம் உள்ளது. என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அறிக்கையில் வைத்தனர்.  இவை அனைத்திற்கும் காரணம் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து நடத்துவதுதான் என பாய்ன்ட் எடுத்து கொடுக்க , கப்பென பிடித்துக்கொண்டார் முதலமைச்சர்.

 

சரி இப்பிரச்சனைகளுக்கெல்லாம் இத்தோடு முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்ததுடன். இனி ஆந்திர அரசு மருத்துவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து நடத்தக்கூடாது. என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அரசு மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஆந்திர மக்கள் முதல்வர் ஜெகன் மோகனை இவன் அல்லவா தலைவன் என நெஞ்சார பாரட்டி வருகின்றனர்.