எந்தக் காரணத்தைக் கொண்டும் கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
கடந்த கோடை மிகவும் உக்கிரமாக இருந்ததால் வழக்கம் போல் ஏப்ரல் முழுவதும் இயங்கும் பள்ளிகளுக்கு 20 தேதியுடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது. அதுபோல் இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் என்பதால் கோடையில் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்துக் கொண்டு அரசு மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதனால் ,கோடை விடுமுறை 44 நாட்கள் ஆனது. இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே வெயில் வெளுத்து வாங்குபதால் பள்ளி விடுமுறை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது.

இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசு பள்ளிகளில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். வழக்கம் போல கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி திறக்கப்பட்ட அன்றைய தினமே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கோடை விடுமுறை நீட்டிக்கப்படாது என திட்டவட்டமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.