Asianet News TamilAsianet News Tamil

"ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது" - நெடுவாசலில் அன்புமணி ஆவேசம்...

Methane has just signed for the project. Stalin was no timukavirku hydrocarbon project is fun to say
anbumani talks-about-stalin
Author
First Published Mar 3, 2017, 4:07 PM IST


மீத்தேன் திட்டத்திற்கு தான் கையெழுத்திட்டேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் திமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. எரிவாயு, மீத்தேன், பெட்ரோல், அனைத்தும் ஹைட்ரோ கார்பன் வகையை சேர்ந்ததுதான் என பா.மக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து தமிழகம் முழுவதும், போராட்டங்கள் வெடிக்க துவங்கியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடாவில் உள்ள பாஜக எம்.பிக்கு தான் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

anbumani talks-about-stalin

இதற்கு அந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் முதலமைச்சர் பழனிசாமி போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் மாநில அரசு அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது எனவும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு போராட்ட குழுவினர் மறுப்பு தெரிவித்து விட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிடும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெயவித்துள்ளன்ர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நெடுவாசலுக்கு நேரடியாக சென்று போராட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து அவர் பேசும்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கட்டுகோப்பாக செல்கிறது.

anbumani talks-about-stalin

கண்டிப்பாக இந்த போராட்டம் வெற்றி பெரும். திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்திக்கு தான் நான் கையெழுத்திட்டேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர், நெடுவாசல் வந்த பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின் இத்தகைய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

anbumani talks-about-stalin

மீத்தேன் திட்டத்திற்கு தான் கையெழுத்திட்டேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் திமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. எரிவாயு, மீத்தேன், பெட்ரோல், அனைத்தும் ஹைட்ரோ கார்பன் வகையை சேர்ந்ததுதான் என பா.மக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்தார்.

ஜல்லிக்கட்டு, மேகதாது அணை, காவிரி நீர் பிரச்சனை, தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் என பல விஷயங்களில் மத்திய  அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவதாக அன்புமணி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios