Asianet News TamilAsianet News Tamil

மோடியே ராமதாசை பாராட்டுகிறார்... ஆனா ஸ்டாலின் கலாய்க்கிறாரு!! அன்புமணி வேதனை

இந்தியாவின் மூத்த தலைவர் என்று ராமதாசை மோடி பாராட்டுகிறார்ஆனால், அவரை  ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தரக்குறைவாக விமர்சித்து பேசினார் என அன்புமணி வேதனையாக கூறியுள்ளார்.

anbumani speech about his father ramadoss
Author
Dharmapuri, First Published May 18, 2019, 6:24 PM IST

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் டி.அய்யம்பட்டி, ஜாலிப்புதூர், நத்தமேடு ஆகிய இடங்களில் நேற்று இரவு அதிமுக கூட்டணியின் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக. வேட்பாளர் அன்புமணி பேசியதாவது; தமிழகத்தில் 60-ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இவற்றில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 8 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்கு முழுமுதல் காரணம் திமுக தான். பாமகவின் கோட்டையான இந்த பகுதியில் ஒரு ஓட்டுகூட வேறு யாருக்கும் செல்லாது என்பதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக திமுக. பொய்யான பிரசாரங்களை செய்து மறுவாக்குப்பதிவு நடத்தும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

anbumani speech about his father ramadoss

இந்த பகுதியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் புகார் அளிக்கவில்லை. திமுகவை சேர்ந்த முகவர்கள் கூட புகார் அளிக்கவில்லை. அப்போது இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மீது நம்பிக்கை இல்லையா?இந்தியாவின் மூத்த தலைவர் என்று ராமதாசை மோடி பாராட்டுகிறார். 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு, கல்விக்கான வாய்ப்பு ஆகியவற்றிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். அவரை  ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தரக்குறைவாக விமர்சித்து பேசினார். ஏற்கனவே இந்த வாக்குச்சாவடிகளில் 89 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தற்போது நடக்கும் மறுஓட்டுப்பதிவில் 100 சதவீத ஓட்டுக்களையும் பதிவு செய்து அதன்மூலம்  ஸ்டாலினுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். 

மேலும் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து திட்டங்களையும் அமைச்சர் அன்பழகனும், நானும் இணைந்து செயல்படுத்துவோம். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஆய்வின்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நானும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச்செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios