Asianet News Tamil

கொரோனாவை கொல்ல என்னோட ஐடியாவை கேளுங்க மோடிஜி... பிரதமருக்கு கடிதம் எழுதிய டாக்டர் அன்புமணி..!

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கின் போது வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்க வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Anbumani ramadoss letter to the Prime Minister modi
Author
Tamil Nadu, First Published Apr 9, 2020, 4:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உங்கள் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவை அளிப்பேன் என்று மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகள்;-

* தேசிய அளவிலான ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். முதல்கட்டமாக இரு வாரங்களுக்கும், பின்னர் கூடுதலாக ஒரு வாரத்திற்கும் நீட்டித்தல் அல்லது கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுக்கப்படுதல், இவற்றில் எது குறைந்த காலமோ, அந்த காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம். கொரோனா நோய் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் குறித்த உத்திகளை வகுப்பதற்காக, இந்த நோய்ப்பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு (ICMR) மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

* ராணுவத்தினர் போல் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ நலப் பணியாளர்கள் நம்மைக் காக்கின்றனர். எனவே அவர்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கருவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும்.

* ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் உழவர்கள். அவர்கள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும் இருக்கின்றனர். அவர்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். அத்துடன் இந்த நெருக்கடி தீர்ந்த பிறகு உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். உணவு தானியங்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றை போக்கும் வகையில், தேவையான தருணங்களில் வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கின் போது வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்க வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், உள்விளையாட்டு அரங்கங்களில் தங்கவைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதார, மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

* கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மற்ற நோயாளிகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், அவர்கள் அனைவரையும் பொது மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதற்கு பதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.

* அனைத்து வகை வங்கிகளிடமிருந்தும் பெறப்பட்ட கடன்களுக்கான 3 மாதத் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தொகையை அசலுடன் சேர்த்து அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ள நிலையில் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

* கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும். சீனா பாரம்பரிய சீன மருத்துவ முறையையும், நவீன மருத்துவத்தையும் இணைத்து பயன்படுத்தி கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தியது. நாமும் இந்த நெருக்கடி காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய மருத்துவ முறையை பயன்படுத்தலாம். நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் நோய்த்தீர்க்கும் திறன் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios