Asianet News TamilAsianet News Tamil

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்... மதுக்கடைகள் இழுத்து மூடப்படும்... அன்புமணி ராமதாஸ் மீண்டும் உறுதி!

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழா்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இலங்கை தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால், இலங்கை குடியுரிமைச் சட்டத்தின்படி அந்நாட்டு குடியுரிமை ரத்தாகிவிடும். எந்த நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என்பதை இலங்கைத் தமிழா்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதெல்லாம் தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். 

Anbumani Ramadoss announced that first signature for shut down the liquor shops
Author
Villupuram, First Published Dec 27, 2019, 8:19 AM IST

பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதுக் கடைகளும் உடனே மூடப்படும். இதுதான்  முதல் கையெழுத்தாக இருக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதஸ் தெரிவித்துள்ளார்.Anbumani Ramadoss announced that first signature for shut down the liquor shops
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பாமக சார்பில் தம்பிகள், தங்கைகள், மக்கள் படை என முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பாமகவின் இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் பேசினார். “தமிழகத்தில் மட்டும் பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, நல்ல நிர்வாகத்தை வழங்குவோம். தொடக்கக் கல்வி முதல் கல்லூரிப் கல்வி வரை இலவசமாக வழங்குவோம். இலவச மருத்துவச் சிகிச்சை கொடுப்போம். கரும்பு விவசாயிகளுக்கான மாற்றுத் திட்டங்கள் எங்களிடம் உள்ளது.Anbumani Ramadoss announced that first signature for shut down the liquor shops
தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். தமிழகத்திலுள்ள எல்லா ஆறுகளிலும் 50 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணையைக் கட்டுவோம். பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதுக் கடைகளும் உடனே மூடப்படும். இதுதான்  முதல் கையெழுத்தாக இருக்கும்.

Anbumani Ramadoss announced that first signature for shut down the liquor shops
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழா்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இலங்கை தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால், இலங்கை குடியுரிமைச் சட்டத்தின்படி அந்நாட்டு குடியுரிமை ரத்தாகிவிடும். எந்த நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என்பதை இலங்கைத் தமிழா்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதெல்லாம் தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. இந்தியாவில் வசிப்பவா்களுக்குக் குடியுரிமை வழங்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios