"நீட்" தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பிரசாரம் செய்வோம், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்,'' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஓர் அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் அமைந்துள்ளன.

திமுகவில் விசிக,மதிமுக காங்கிரஸ் என ஒரு டீமும், அதிமுக அணியில் பிஜேபி 5 தொகுதிகளையும், பாமக 7 + 1 வாங்கி   களத்தில் குதிக்க தயாராக உள்ளது. ஆனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தேமுதிக யார் பக்கம் போகிறது என சொல்லாமல் பேச்சு வார்த்தை இழுபறியால் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சேலத்தில் அவர் அளித்த பேட்டியில்; தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை மையமாக வைத்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். முக்கியமாக, காவிரி டெல்டா பகுதியில், பாதுகாக்கப்பட்ட விவசாயம், விவசாயிகளுக்கு பயிர் கடன் ரத்து; தமிழகத்தில், "நீட்" தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பிரசாரம் செய்வோம்.

இதுவரை, வெளியிலிருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டது. பிஜேபி கூட்டணியில் இருப்பதால், உள்ளிருந்து அழுத்தம் தர உள்ளோம். மோடி தலைமையில் நடக்கும், பிரசார கூட்டத்தில், பா.ம.க., பங்கேற்கும். திமுக கூட்டணிக்கு செல்லவில்லை என்ற ஆதங்கத்தில், அவதுாறு பரப்பும் அக்கட்சியினர் குறித்து, விமர்சிக்க விரும்பவில்லை. தொகுதிகள் முடிவானதும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். 40 தொகுதிகளிலும், எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.