Asianet News TamilAsianet News Tamil

அன்புமணி ஒரு திறமைசாலி.. அம்மா ஓட்டுபோடு.. அய்யா ஓட்டுபோடுன்னு வீடு வீடா போங்க.. ராமதாஸ் கட்டளை.

இந்நிலையிலும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மருத்துவர் ராமதாஸ் மனம்விட்டு பேசியுள்ளார். நாம் யாருக்காக போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தோம். அந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று வழக்கு போட்டுள்ளார்கள், 42 வருடங்களாக மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன்.

Anbumani is a talented .. mother and father please put vote for pmk .. every cadres go and should ask door to door.. Ramadas order.
Author
Chennai, First Published Nov 26, 2021, 6:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அன்புமணியை போல ஒரு திறமைசாலி தமிழகத்தில் யாரும் இல்லை, நீங்கள் தமிழகத்தை ஆள வேண்டும், அதற்காக வீடு வீடாக சென்று பாமகவுக்கு வாக்கு கேட்டு திண்ணைப் பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ்  அக்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தன் மூச்சு இருப்பதற்குள் எப்படியாவது அன்புமணியை முதல்வராக்கிவிட வேண்டும் என்று அவர் போராடிவரும் நிலையில் இவ்வாறு பேசியுள்ளார். 

வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு போராட்டம் நடத்தி அதன்மூலம் தமிழகத்தின் அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாமக. காலப்போக்கில் அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி கூட்டணி வைத்து வந்ததால், அக்காட்சி தலைமையின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எந்த வன்னியர்களுக்காக கட்சியை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வந்தோமோ அதே வன்னியர்கள் முழுவதுமாக பாமக என்ற குடையின் கீழ் அணிதிரள வில்லையே என்பது மருத்துவர் ராமதாஸின் நீண்டநாள் ஏக்கமாக இருந்து வருகிறது. அந்தக் கட்சி எடுத்த தவறான கொள்கை முடிவுகள், கூட்டணி வியூகங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, வட இந்தியாவில் பாஜக எப்படி மதவாதத்தை வைத்து அரசியல் செய்கிறதோ, அதே போல பாமக சாதியை வைத்து அரசியல் செய்கிறது என்று அக்கட்சி மீது அழியாத சாதி முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதேபோல அடிக்கடி சினிமா நடிகர்களுக்கு எதிராக அக்கட்சி பேசிவருவது, தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வது போன்ற காரணங்களால் பொதுச் சமூகத்தின் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்துள்ளது.

Anbumani is a talented .. mother and father please put vote for pmk .. every cadres go and should ask door to door.. Ramadas order.

பாஜக, அதிமுக என இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்ளை எதிர்கொண்டுவரும் பாமக தனது செல்வாக்கு மிகுந்த பகுதிகளிலேயே கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கட்டத்தில் தனித்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டும் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. பிறகு வழக்கம்போல அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவுக்கே அக்காட்சி தள்ளப்பட்டது. தற்போது பாஜக உடன் அந்த காட்சியை அதிக நெருக்கம் பாராட்டி வருவதால், சொந்த சமூக மக்களே அக்காட்சியை புறக்கணிப்பதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதேபோல் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கட்சி, தனித்தே களம் கண்டும், கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மனமுடைந்து போன மருத்துவர் ராமதாஸ், கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் கடந்து விட்டது, ஆனால் இன்னும் கூட பாமகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. நாம் யாருக்காக, எதற்காக கட்சி நடத்த வேண்டும்? ஒரேயடியாக கட்சியை கலைத்து விடலாமா?இத்தனை ஆண்டுகளாக அரசியல் நடத்திய எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் தவறு உங்கள் மீதா? என் மீதா எனதொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார் அவர்.

இதற்கிடையில் ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமக நடத்தி வரும் போராட்டம், பொது சமூகத்தில் அக்கட்சிக்கு  நெகட்டிவ் இமேஜ்ஜை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் எப்படியாவது வன்னிய மக்களை சாதி ரீதியாக ஒன்று திரட்டி விட வேண்டும் என்ற உள் நோக்கத்துடன்  நடத்தப்படுவதாக அக்கட்சியின் மீது குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அக்கட்சி தொடர்ச்சியாக சந்தித்து வரும் தொடர் தோல்வியில் இருந்து மீள வழி தேடிவருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களிலாவது இழந்த செல்வாக்கை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பாமக தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் தென்மாவட்டங்களில் பலத்தை காட்ட வேண்டிய நெருக்கடி அந்த கட்சி ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டிவனம், செஞ்சி, மயிலம் ஆகிய  தொகுதிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் அடுத்து வரும் தேர்தலில் அன்புமணி தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும் என்றும், நூற்றுக்கு 40 சதவீத வாக்குகளைப் பெற்று 60 எம்எல்ஏக்களை நாம் பெற வேண்டும் என்றும். அதற்காக கடுமையாக நீங்கள் உழைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Anbumani is a talented .. mother and father please put vote for pmk .. every cadres go and should ask door to door.. Ramadas order.

இந்நிலையிலும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மருத்துவர் ராமதாஸ் மனம்விட்டு பேசியுள்ளார். நாம் யாருக்காக போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தோம். அந்த வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று வழக்கு போட்டுள்ளார்கள், 42 வருடங்களாக மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன். உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிரோடு இருக்கிறேன், வயதான என்னால் பேச தான் முடியும், இனி இந்தக் கட்சியின் எதிர்காலம் இளைஞர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை நாம் பெறவேண்டும், ஒரு பூத்தில் 1000 வாக்குகளையாவது நாம் பெறவேண்டும். ஆனால் 60 இடங்களில் வெற்றி பெற்றால் அன்புமணியை முதல்வராக்கி விடலாம், அன்புமணியைப்போல ஒரு திறமைசாலி யாரும் கிடையாது. அவரிடம் மக்கள் ஆட்சியைத் தர ஏன் தயங்குகிறார்கள். ஆட்சியில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி நிறைவாக வாக்குகளைச் செலுத்தி விட்டீர்கள், இனி ஒரு முறை, ஒரேயொரு முறையாவது பாமகவுக்கு வாக்கு போடுங்கள் என மக்களுக்கு வீடு வீடாக சென்று அம்மா ஓட்டு போடு.. ஐயா ஓட்டு போடு.. தம்பி, தங்கைகளே பாமகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று நீங்கள் ஒவ்வொருவரும் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் போது கோட்டையில் நம் கொடி பறக்கும்,  உங்களுடைய கொடி பறக்கும். இவ்வாறு பேசியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios