தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்காதது ஏன்.? மத்திய அரசை விமர்சிக்கும் அன்புமணி

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத் தலைவர், உறுப்பினர்களை  உடனடியாக நியமிக்க வேண்டும் என பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani insisted that members should be appointed to the National Commission for Backward Persons

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்- வருத்தமளிக்கிறது

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் துணைத் தலைவர் உறுப்பினர் நியமனம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  இந்தியாவின் எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி  வரும் 28-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது.  ஆனால், ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது!எட்டாவது ஆணையம் காலாவதியாகி 9 மாதங்கள் கழித்து தான் கடந்த நவம்பர் 27-ஆம் நாள் ஒன்பதாவது ஆணையத்தின் தலைவராக  ஹன்ஸ்ராஜ் ஆஹிர் நியமிக்கப்பட்டார். அதன்பின்  3 மாதங்கள் ஆன பிறகும் ஆணையத்தின் துணைத்தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை!

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக யாருக்கு ஆதரவு.? தொண்டர்களுக்கு உத்தரவிட்ட டிடிவி தினகரன்


உடனடியாக நியமிக்க வேண்டும்

ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இதற்காக உயர்நீதிமன்றத்தில்  வழக்கும் தொடர்ந்துள்ளது. ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது ஏமாற்றமளிக்கிறது! கிரீமிலேயர் வரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை  மத்திய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு அதிகரிக்கும் ஆதரவு .! பாஜகவை தொடர்ந்து இபிஎஸ்க்கு கை கொடுத்த முக்கிய கட்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios