டாஸ்மாக் மது வணிகத்தில் கலால்வரி ஏய்ப்பா? சி.பி.ஐ விசாரணை நடத்தனும்- திமுக அரசை சீண்டும் அன்புமணி

தமிழகத்தில் உள்ள மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவும் சமமாக இருக்கிறதா என்பதை தமிழக அரசின் ஆயத்தீர்வை துறை ஆய்வு செய்திருந்தாலே  இந்த வரி ஏய்ப்பு அம்பலமாகியிருக்கும். ஆனால், அதை ஆயத்தீர்வைத்துறை செய்ததா? எனத் தெரியவில்லையென அன்புமணி தெரிவித்துள்ளார். 

Anbumani has insisted on an investigation into the excise duty evasion in the Tasmac liquor business

கலால் வரி- மோசடி

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுப்புட்டிகளில் பெரும்பாலானவற்றுக்கு கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் ஏய்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை; அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் மதுவணிகத்தில்  வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு கீழும் 5 முதல் 10 சட்டவிரோத மதுக்கடைகள் இயங்குகின்றன. அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுப்புட்டிகள் எதற்கும் கலால் வரியோ, மதிப்புக் கூட்டு வரியோ செலுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. 

Anbumani has insisted on an investigation into the excise duty evasion in the Tasmac liquor business

கள்ளச்சந்தையில் விற்கப்படும் மது

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே இந்த வரி ஏய்ப்பை உறுதி செய்கின்றனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுப் புட்டிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மட்டும் தான் முறைப்படி கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தப்படுவதாகவும், மீதமுள்ள இரு பங்கு மதுப்புட்டிகள் எந்த வரியும் செலுத்தப்படாமல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் புகார்களை நம்பாமல் இருக்க  முடியவில்லை. இக்குற்றச்சாட்டை  நிதியமைச்சராக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனும்  உறுதி செய்திருக்கிறார்.  மதுபாட்டில்கள் மீது ஹோலோகிராம் முத்திரை ஒட்டும் இப்போதைய முறை பயனற்றது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் கருவிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. மது விற்பனை அமைப்பு அடிப்படையாக மேம்படுத்தப்படவேண்டும்’’ என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார். அதற்குப் பிறகும் கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Anbumani has insisted on an investigation into the excise duty evasion in the Tasmac liquor business

  வருவாய் அதிகரிக்க காரணம் என்ன.?

கடந்த 2021-22ஆம் ஆண்டில் கலால் வரி ரூ.8236.60 கோடி, மதிப்புக் கூட்டு வரி ரூ.27,814.05 கோடி என மொத்தம் ரூ.36,050.65 கோடி மதுவணிகத்தின் மூலம் வருவாயாக கிடைத்தது. கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டிருந்தால், மது வணிகத்தின் மூலமான வருவாய் 2022-23ஆம் ஆண்டில் ரூ.72,000 கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், 2022-23ஆம் ஆண்டில் மது வணிகத்தின் மூலமான வருவாய் ரூ.44,098 கோடி மட்டும் தான். கலால் வரி உயர்வு காரணமாக மதுப்புட்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டதும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் எண்ணிக்கை 553 ஆக அதிகரிக்கப்பட்டதால்  மது விற்பனை உயர்ந்ததும் தான் வருவாய் அதிகரிக்க காரணமே தவிர, வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டது அல்ல.

Anbumani has insisted on an investigation into the excise duty evasion in the Tasmac liquor business

வரி ஏய்ப்பு அம்பலமாகியிருக்கும்

கலால் வரி ஏய்ப்பு என்பது ஆயத்தீர்வை துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மது ஆலையும் தனித்து இயங்குவதில்லை. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மதுப்புட்டிக்கும் கலால் வரி செலுத்தப்படுவதையும், மதுப்புட்டிகள் டாஸ்மாக் கிடங்கைத் தவிர வேறு எங்கும் செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யவும் ஒவ்வொரு ஆலையிலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களின் கண்காணிப்பை மீறி வரி ஏய்ப்பும், கள்ளச் சந்தைக்கு செல்வதும் நடக்காது. தமிழகத்தில் உள்ள மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவும் சமமாக இருக்கிறதா என்பதை தமிழக அரசின் ஆயத்தீர்வை துறை ஆய்வு செய்திருந்தாலே  இந்த வரி ஏய்ப்பு அம்பலமாகியிருக்கும். ஆனால், அதை ஆயத்தீர்வைத்துறை செய்ததா? எனத் தெரியவில்லை.

Anbumani has insisted on an investigation into the excise duty evasion in the Tasmac liquor business

கலால் வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பு

கலால் வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பது இப்போதும் கூட கடினமானது அல்ல. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகளில் கடந்த காலங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டது? எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த ஆலைகளில் எவ்வளவு மது மற்றும் பீர் தயாரிக்கப்பட்டது என்பதை கணக்கிட முடியும். எந்த அளவுக்கு மதுவும், பீர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டனவோ, அதே அளவுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை மிகவும் எளிதாக கண்டறிய முடியும். அதை இன்று வரை ஆயத்தீர்வைத் துறை செய்யாதது ஏன்?

Anbumani has insisted on an investigation into the excise duty evasion in the Tasmac liquor business

சிபிஐ விசாரணை நடத்தனும்

தில்லியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் மது கலால் வரிக் கொள்கையை வகுத்ததால் பெரும் புயல் எழுந்துள்ளது. அது தொடர்பான விசாரணை தில்லியில் தொடங்கி தெலுங்கானா வரையிலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த 20 ஆண்டுகளாக கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதற்காக, கலால்வரி மற்றும் விற்பனை வரி ஏய்ப்பு குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! வேலைக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios