Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் ஊழலை லிஸ்ட் போட்டு ஆளுநரிடம் கொடுத்த அன்புமணி..!

anbumani gave tamilnadu government bribe list to governor
anbumani gave tamilnadu government bribe list to governor
Author
First Published Dec 9, 2017, 3:04 PM IST


தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை குறித்து ஆளுநரிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வரிடம் விளக்க அறிக்கை கோருதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கோரியும் ஆளுநரிடம் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மணல் விற்பனை, தாதுமணல், கிரானைட், மின்வாரியம், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, குட்கா, வாக்கிடாக்கி, பிற ஊழல்கள் என பட்டியல் வாரியாக அன்புமணி ராமதாஸ் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், இதேபோன்றதொரு ஊழல் பட்டியலை முன்னாள் ஆளுநர் ரோசய்யாவிடம் பாமக சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன்மீது அவர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் முதல் முதலமைச்சர் வரை அனைத்து துறைகளிலும் ஊழலில் ஊறியுள்ளனர். நாங்கள் அளித்துள்ள ஊழல் பட்டியலில் 24 ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளோம். மணல் கொள்ளை, தாதுமணல், உயர்கல்விதுறையில் துணை வேந்தர் நியமனம் என அனைத்திலும் ஊழல் என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios