அன்புமணி குடும்பத்தில் குழப்பம்... ஆரணியை காங்கிரசுக்கு ஸ்டாலின் ஒதுக்கியதன் பரபரப்பு பின்னணி...!

திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு நேற்று முன்தினம் கையெழுத்தானது. இந்த நீண்ட இழுபறிக்கு ஒரே ஒரு பகுதிதான் காரணமாக இருந்தது. ஆரணி தொகுதியைவிட சேலம் தொகுதியை திமுகவிடமிருந்து பெறுவதில்தான் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. ஆனால் ஸ்டாலினோ ஆரணி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

anbumani family Confusion...MK Stalin master plan

திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு நேற்று முன்தினம் கையெழுத்தானது. இந்த நீண்ட இழுபறிக்கு ஒரே ஒரு பகுதிதான் காரணமாக இருந்தது. ஆரணி தொகுதியைவிட சேலம் தொகுதியை திமுகவிடமிருந்து பெறுவதில்தான் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. ஆனால் ஸ்டாலினோ ஆரணி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கு ஒரே ஒரு காரணம் ஆரணி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் அங்கு நிச்சயமாக விஷ்ணு பிரசாத் தான் போட்டியிடுவார். விஷ்ணு பிரசாத் வேறு யாருமல்ல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன். அதுமட்டுமல்ல பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனரும் கூட. anbumani family Confusion...MK Stalin master plan

அதிமுக கூட்டணியில் ஆரணி தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரணி தொகுதியில் விஷ்ணு பிரசாத் போட்டியிடும் பட்சத்தில் எதிர்த்து பாமக வேட்பாளர் களமிறங்க வேண்டும். பாமக வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி பிரச்சாரம் செய்ய நேரிடும். அன்புமணியின் பிரச்சாரத்திற்கு விஷ்ணு பிரசாத் பதிலடி கொடுக்க வேண்டும். ஏற்கனவே பாமக அதிமுக கூட்டணியில் இணைந்த போது விஷ்ணு பிரசாத் பேசிய பேச்சுக்கள் அன்புமணி குடும்பத்தில் ஏற்படுத்தியது. விஷ்ணு பிரசாத்தின் விமர்சனங்கள் தங்கள் மனதை மிகவும் புண்படுத்தியதாக அன்புமணி வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். ஆனால் பாமக பணத்திற்காகவும் தொகுதி காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று அன்புமணியை மீண்டும் வம்புக்கு இழுத்தால் விஷ்ணு பிரசாத். anbumani family Confusion...MK Stalin master plan

இப்படி அன்புமணி குடும்பத்தில் அன்புமணிக்கும் அவரது மைத்துனர் விஷ்ணு பிரசாத் இருக்கும் மோதல் இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக ஆரணியில் விஷ்ணு பிரசாத் களமிறங்கினால் எதிர்த்து பாமக வேட்பாளர்கள் இறங்கும் போது மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு அன்புமணி மனதளவில் பாதிக்கப் படுவார் என்று திமுக கருதுகிறது. இதனால்தான் சேலம் தொகுதியை காங்கிரஸ் விரும்பிக் கேட்டாலும் சேலம் தங்களுக்கு வேண்டும் என்று அடம் பிடித்து ஆரணியை காங்கிரசிடம் தள்ளிவிட்டுள்ளார் ஸ்டாலின். anbumani family Confusion...MK Stalin master plan

அன்புமணியை மனதளவில் பாதிக்க செய்தால் அவருடைய பிரசார வியூகம் மற்றும் தேர்தல் வியூகத்தின் பின்னடைவு ஏற்பட்டு வடமாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார். இதனால் தான் கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் இழுபறியாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆரணி தொகுதியை வலுக்கட்டாயமாக காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு சேலத்தை ஸ்டாலின் வாங்கி வைத்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் செய்யும் இந்த அரசியல் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் குமுறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios