தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து 5 ஆண்டுகள் விலக்களிக்க வேண்டுமென்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமனி ராமதாஸ் வலியுறுத்தியுளார்.

'நீட்' அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டஅதிகாரிகள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை மற்றும்பிரதமர் அலுவலக அதிகாரிகளை இன்று சந்தித்து, கூடுதல் ஆவணங்கள் வழங்குகின்றனர்.
 
மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் சட்ட வல்லுனர்களும் தமிழக அரசின் சட்டவரைவு அம்சங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பெற்ற பின் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டுதமிழக அரசின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசு இன்று முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாமுக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓராண்டுக்குள் தமிழக மாணவர்கள் நீட்டை எதிர்கொள்ளும் திறனை எவ்வாறு பெறுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன் நீட் தேர்வை எழுதுவதற்கு 9ஆம் வகுப்பு முதலே மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மாறவுள்ளதால் , 9ஆம் வகுப்பு மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் வரை நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் ஓராண்டு விலக்கு என்பது தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வை திணிக்கும் செயல் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்..