மு.க.ஸ்டாலின் காணும் கனவு என்றும் பலிக்காது என்று தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று இரவு பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ் 80-வது முத்துவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு டாக்டர் அன்புமணி, கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு  பேசியதாவது;

மனசாட்சி இல்லாத எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாய கடன்கள் ரத்து, கல்விக் கடன் ரத்து, வங்கிக் கடன் ரத்து என்று அப்போ அளவுக்கு அதிகமாக  பொய் சொல்லிவிட்டார். ஸ்டாலினால் வெறும் சட்டையை மட்டும் தான் கிழிக்க முடியும்.

இன்னும் 18 நாட்களில் நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவதாக ஸ்டாலின் சொன்னார். ஆனால், அவர் காணும் கனவு என்றும் ஒருபோதும் பலிக்காது. கடந்த 50 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தது? இனி வந்தும் என்ன செய்யபோகிறார்?

காவிரி பிரச்சனைக்கு காரணம் திமுக. தான். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் கொண்டு வந்தது திமுக தான். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழப்புக்கு முக்கிய காரணம் மு.க.ஸ்டாலின், தற்போது அவர்கள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் இவ்வாறு அவர் பேசினார்.