திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை விவாதம். நானும் 4 ஆண்டுகளாக விவாதத்துக்கு அவரை கூப்பிட்டு கொண்டே இருக்கிறேன். ஆனால் வரவே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை விவாதம். நானும் 4 ஆண்டுகளாக விவாதத்துக்கு அவரை கூப்பிட்டு கொண்டே இருக்கிறேன். ஆனால் வரவே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "எப்ப பார்த்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களை திட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். திட்ட மட்டுமே அவருக்கு தெரிகிறது. ஆனால், நல்ல திட்டங்களை பற்றி தெரிவதில்லை. நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுறதே கிடையாது. ஆனால் நாங்கள் பேசுறோம். 

தமிழ்நாட்டுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? நாங்க என்ன செஞ்சோம்? என்று மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் எப்பவும் தயாராகத்தான் இருக்கிறேன். அதனால்தான் விவாதிக்க வாங்க என்று 4 வருஷமாக கூப்பிடுகிறேன். அதுவும் ஒரு ஆரோக்கியமான அரசியல் விவாதத்துக்குதான் கூப்பிடுகிறேன். ஆனால் அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "விவாதம்".

இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கு ஒன்று உள்ளது. அதை இன்னும் 4 மாதத்தில் முடிக்கும்படி கீழ் நீதிமன்றத்துக்கு உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அவருக்கு ஓட்டு போட்டால், அடுத்த 4 மாசத்தில் கண்டிப்பாக இதே மத்திய சென்னையில் இடைத்தேர்தல் வரும். தயாநிதி மாறன் பெரும் பணக்காரர். 

இந்த தொகுதியில் காலி குடங்களோடு பெண்கள் நிற்கிறார்கள் என்று அவர் பேசியிருக்கிறார். 10 ஆண்டுகளாக இதே தொகுதியில்தான் அவர் எம்பியாக இருந்திருக்கிறார். குடிநீர் பிரச்சனையை தீர்க்க அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால், யாருமே காலி குடங்களோடு நின்றிருக்க மாட்டார்கள்’’ என அவர் விமர்சித்துள்ளார்.