அன்புமணியின் அசத்தலான 7 விதிகள்... பாமக ஐடி விங் கூட்டத்தில் அறிவிப்பு!!

டாக்டர் அன்புமணி  MP பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அசத்தலான 7 விதிகளை வெளியிட்டுள்ளார். இதையே சமூக ஊடகப்பேரவை இனி பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார்.

Anbumani announced 7 law for his party it wing

டாக்டர் அன்புமணி  MP பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அசத்தலான 7 விதிகளை வெளியிட்டுள்ளார். இதையே சமூக ஊடகப்பேரவை இனி பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார்.

1. மருத்துவர் அய்யா கருத்துக்கு மாற்று கருத்து இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் முடிவாக அறிவித்த விடயங்களுக்கு மாறான கருத்து எதையும் சமூக ஊடகங்களில் பகிராதீர்.

2. கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணான கருத்துக்களை வெளிப்படுத்தாதீர். பெரியார், இடஒதுக்கீடு, சமூகநீதி, சாதி மத நல்லிணக்கம் உள்ளிட்ட கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் எழுதாதீர்.

3. கட்சிக்கு சமூக ஊடகம் மூலம் ஆலோசனை வழங்காதீர். அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணி, கட்சி நிர்வாகிகள் போன்ற எந்த விடயத்திலும் கட்சிக்கு சமூக ஊடகத்தின் மூலம் ஆலோசனை வழங்காதீர் (உங்கள் ஆலோசனையை தனிப்பட்ட முறையிலோ, உட்கட்சி கூட்டங்களிலோ வெளிப்படுத்தலாம்).

4. பாமகவில் இருப்பது மருத்துவர் அய்யா கோஷ்டி மட்டுமே. வேறு கோஷ்டிகளை உருவாக்காதீர். எந்தவொரு பகுதியிலும் நான் இவருடைய ஆள் என்று கோஷ்டி சேராதீர். அவ்வாறே, சமூக ஊடகங்களிலும் கட்சிக்குள் குழு மோதல்களில் ஈடுபடாதீர்.

5. பாமகவின் எந்தவொரு கிளை, ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில தலைவர்களுக்கு எதிராகவும், எந்தவொரு குறையையும் சமூக ஊடகத்தில் எழுதக் கூடாது. (அவ்வாறு குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை அய்யா அவர்களிடமோ, அல்லது உட்கட்சி கூட்டங்களிலோ மட்டும் தான் பேச வேண்டும். பொதுவெளியில் வெளிப்படுத்தக் கூட்டது)

6. சாதி, மதம், மொழி அடிப்படையில் வெறுப்பு கருத்துகளை வெளிப்படுத்தாதீர். வேறு கட்சிகள் அமைப்புகளில் உள்ள தனி நபர்களை அவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் விமர்சிக்கலாம். ஆனால், அவர்கள் சார்ந்த சாதி, மதம், மொழியை இழிவு செய்யாதீர். மத வெறி, இன வெறி, மொழி வெறி, சாதி வெறி உள்ளிட்ட கேடுகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி முற்றிலும் எதிரானதாகும். அத்தகைய கருத்துகள் எதையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்யாதீர், பகிராதீர்.

7. மாற்று கட்சி ஆதரவு கருத்துகளை பாமகவினர் போர்வையில் பேசுவோரை அடையாளம் கண்டு விலக்குங்கள், விலகுங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios