Asianet News TamilAsianet News Tamil

கல்வித்துறையில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது… கடந்த அதிமுக ஆட்சி குறித்து அன்பில் மகேஷ் விமர்சனம்!!

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

anbil mahesh criticizes the previous admk regime in the education sector
Author
First Published Apr 26, 2023, 6:35 PM IST | Last Updated Apr 26, 2023, 6:35 PM IST

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஏஜி அறிக்கையில் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. பழங்குடியினருக்கான 60 சதவீத வீடுகள் அந்த மக்களை சென்றடையவில்லை என சிஏஜி தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 4 நாள் கூட ஆகல.. இப்பவே இப்படி! ‘கோட்டை’ விட்டுடாதீங்க! திமுகவுக்கு வார்னிங் கொடுத்த வானதி சீனிவாசன்

அதிமுக ஆட்சியின்போது 3 சதவீதம் மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது. மேலும் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதையும் படிங்க: பிரியங்கா காந்திக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்த காங்கிரஸ் தொண்டர்!

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி ஒரு உதாரணம். கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016 ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மடிக்கணினி திட்டம் அதிமுக ஆட்சியில் 1.75 மாணவர்களுக்கு வழங்கவில்லை. ரூ. 2.18 கோடி தேவையற்ற செலவு என அறிக்கை குறிப்பிட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios