ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் பொதுச் செயலாலராக வந்த சசிகலா, முதல்வாராக அடுத்த மூவ் ஆரம்பித்த சமயத்தில் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு வந்து தியானம் இருந்துவிட்டு, தர்மயுத்தம் தொடங்கியதைப்போல தற்போது,  கருணாநிதி மறைவுக்கு பிறகு, செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக உருவெடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அழகிரி, தனது பக்கம்தான் திமுக விசுவாசிகள் உள்ளதாக கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கட்சியின் செயற்குழு கூடவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மு.க.அழகிரி பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போலத் தெரிகிறது,

தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி. மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக அதகளம் பண்ணியவர். என்னதான் ஆர்.கே நகர் இடைதேர்தல் பலராலும் பேசப்பட்டாலும், "திருமங்கலம்" என்ற ஒரு புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கினார்.  ஆனாலும் சில பிரச்சனைகள் காரணமாக கருணாநிதி 2014 ல்  கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது கருணாநிதி மறைவுக்குபின்  மீண்டும் கோபாலபுரம் வந்த அழகிரியை வந்த வேகத்திலேயே அறிவாலயத்திற்குள் அனுப்ப குடும்பத்திலேயே பலர் முயல்கிறார்கள். கருணாநிதி இருந்தபோதே இந்த வேலை நடந்தது.  ஆனால் ஸ்டாலின் தரப்பின் எதிர்ப்பால் இது கைகூட வில்லை.

மீண்டும் அவரை சேர்த்து தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கலாம் என பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தனக்கு வேண்டவே வேண்டாம்... மாநில அளவிலான பதவிதான் வேண்டும் என்று அழகிரி நிர்பந்தித்தாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது அன்பழகன் ரூபத்தில் அழகிரிக்கு பேராபத்து வந்துள்ளது. 

அழகிரியை கட்சியில் சேர்க்கவே கூடாது என்று அன்பழகன் திட்டவட்டமாக கூறி விட்டதாக சொல்கிறார்கள்.

 சமீபத்தில் மு.க.ஸ்டாலின் அன்பழகனைப் போய்ப் பார்த்தபோது இதுகுறித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. அழகிரிக்கு பதவியா? லோக்சபா தேர்தல் முடியும் வரை அவரை சேர்க்காதீர்கள். சேர்த்தால் சரிவராது. நிர்வாகம் சீர்குலையும். இப்போது எல்லாமே சரியா நடந்துட்டு இருக்கு. இதை சீர்குலைக்க அனுமதித்தால் பெரும் பாதகமாக போய் விடும். யார் சொன்னாலும் சரி, எங்கிருந்து நெருக்கடி வந்தாலும் சரி, மீண்டும் திமுகவுக்குள் அழகிரி வரவே கூடாது என ஸ்டாலினிடமே அன்பழகன் தெரிவித்து விட்டாராம்.

கட்சியை பொறுத்தவரை அப்பாவிற்குப் பிறகு எல்லாமே அன்பழகன் தான்,  ஒன்றுக்கு நூறுமுறை யோசித்த அன்பழகன்  அழகிரி மீண்டும் திமுகவிற்குள் வந்தால் என்னவாகும் என தெளிவாக சொல்லிவிட்டதாலும் அழகிரியை மீண்டும் சேர்ப்பது குறித்து என்ன முடிவேடுக்கப்போகிறார் என திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகவே உள்ளது. இந்தர்க்கு முடிவு நாளை கூடவிருக்கும் செயற்குழுவில் தால் தெரியவரும்.