ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு.. இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது.. அண்ணாமலை.!
செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பது வேடிக்கை.
ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய திமுக அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்து அறநிலையத்துறையில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மேலமாசி வீதி மதனகோபால் சுவாமி கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரில் தினமலர் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீது எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு தமிழக பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தொடர்ந்து இந்து மத விரோதப் போக்கில் திமுக.. தவறைத் தட்டிக் கேட்ட பாஜகவினரை கைது செய்வீங்களா? அண்ணாமலை.!
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தத் தடை குறித்து தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோவில்களுக்கு வந்த பக்தர்களைத் தடுத்த செய்திகள் என பல ஆதாரங்கள் உள்ள நிலையிலும், திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பது வேடிக்கை.
இதையும் படிங்க;- யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுறீங்க! இந்து மத மக்களை சீண்டி பாக்காதீங்க! அண்ணாமலை..!
அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசு, பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.