அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினிகாந்த்தை அதிமுகவில் இருந்த நடிகர் ஆனந்த ராஜ் சந்தித்துப்பேசினார்.  

நடிகர் ஆனந்த்ராஜ் அதிமுகவில் மிக தீவிரமாக இருந்தார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் இருந்தார். தேர்தல் வந்தால் அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்யவதுதான் ஆனந்த்ராஜின் வாடிக்கை.
 

ஆனால் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு ரொம்பவே அப்செட் ஆனார். ஜெயலலிதாவின் மறைவு யாருக்கு இழப்போ இல்லையோ எனக்கு மிகப்பெரிய இழப்பு என கண்ணீர் விட்டார் ஆனந்த் ராஜ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியகா இருந்து வந்தார். 

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமக அனைத்து இடங்களிலும் தோற்றதால் ராமதாஸ் மகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கக்கூடாது. திக்கப்பட்டவர்கள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தேன். அதே போன்று நானும் நோட்டாவுக்கு தான் வாக்களித்திருந்தேன்’’ எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறப்படும் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்டது வீட்டில் நடிகர் ஆனந்த் ராஜ் சந்தித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இது வழக்கமான சந்திப்பு. அரசியல் விஷயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை’’ எனத் தெரிவித்தார். ஆனாலும் அவர் அதிமுகவில் தற்போது இல்லாததால் ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியின் ஆனந்தராஜ் இணைவதற்கான சந்திப்பு இது எனக் கூறப்படுகிறது.