‘ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து தென்னை மரங்களைப் பார்வையிட்டேன். தரைவழியாக மு.க.ஸ்டாலினைப்போல அரைகுறையாகப் பார்வையிடுவதை விட மக்கள் பிரச்சினகளை தெளிவாகப் புரிந்துகொள்ள ஹெலிகாப்டரில் பார்வையிட்டதே சாலச்சிறந்தது’ என்று முரட்டுப்பிடிவாதத்துடன் நமது முதல்வர் சால்ஜாப்பு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெள்ளச் சேதத்தினை பார்வையிட்ட படம் ஒன்று வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

எதற்கெடுத்தாலும் புரட்சித்தலைவர் வழியில் நடைபோடும் முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது அவரது அமைச்சரவை சகாக்களின் மேலான பார்வைக்கு இந்த புகைப்படம்.